India

ரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்

Dinakaran - Mar, 01/12/2020 - 21:33

மாஸ்கோ: ரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

Categorie: India

உருவானது புரெவி புயல்

Dinakaran - Mar, 01/12/2020 - 20:44

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது. இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது புரெவி புயல். டிச. 4-ம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே தென்தமிழக கடற்கரையில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categorie: India

பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்

Dinakaran - Mar, 01/12/2020 - 20:25

சென்னை: பேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது என அண்ணா பல்கலை. பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படை தன்மையை பின்பற்ற வேண்டும். பேராசிரியர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாவதை தவிர்க்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categorie: India

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு

Dinakaran - Mar, 01/12/2020 - 20:18

டெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என டெல்லியில் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ள. மேலும் மீண்டும் டிச.3-ல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறின.

Categorie: India

ரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு

Dinakaran - Mar, 01/12/2020 - 19:31

சென்னை: தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் இரணியம்மன்கோயில் அருகே ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categorie: India

நிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

Dinakaran - Mar, 01/12/2020 - 19:13

சென்னை: நிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்களின் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரி தேர்வில் மீண்டும் மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categorie: India

சென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

Dinakaran - Mar, 01/12/2020 - 19:09

சென்னை: சென்னை அடையாறில் வாகன சோதனையின் போது 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 வேன்களில் கடத்தப்பட்டு வந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categorie: India

Jagan suggests Speaker to admit Chandrababu Naidu in mental asylum

Deccan Chronicle - Mar, 01/12/2020 - 19:02
The CM even advised the Speaker to suspend TD MLAs who were disrupting proceedings in the House
Categorie: India

டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Dinakaran - Mar, 01/12/2020 - 18:46

சென்னை: டிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கூறினார். 

Categorie: India

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை

Dinakaran - Mar, 01/12/2020 - 18:37

குமரி: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்க்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரியில் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

Categorie: India

நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்

Dinakaran - Mar, 01/12/2020 - 18:33

சென்னை: நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது என அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Categorie: India

சபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி

Dinakaran - Mar, 01/12/2020 - 18:26

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் வார நாட்களில் 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது.

Categorie: India

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

Dinakaran - Mar, 01/12/2020 - 18:21

சென்னை: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 20% இடதுக்கீட்டை முறையாக அமல்படுத்தும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

Categorie: India

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு

Dinakaran - Mar, 01/12/2020 - 18:20

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்ற விசாரணையை விமர்சித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

Categorie: India

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

Dinakaran - Mar, 01/12/2020 - 18:16

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள்  நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். கண்ணம்மாள், சாந்திகுமார், முரளிசங்கர், மங்சுளா, தமிழச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

Categorie: India

ரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு

Dinakaran - Mar, 01/12/2020 - 18:08

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டதாக 300 -க்கும் மேற்பட்ட பாமகவினர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலைய இயக்குனர் அன்பழகன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பெயரில் அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categorie: India

புதுக்கோட்டையில் மணல் கடத்தியதாக ஊராட்சித் தலைவர் உட்பட 2 பேர் கைது !

Dinakaran - Mar, 01/12/2020 - 17:59

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மணல் கடத்தியதாக கைதானவர் தப்பிக்க உதவிய ஊராட்சித் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வெங்கடேஷ் என்பவர் காவல் நிலையத்தில் இருந்து காரில் தப்பிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேஷ் தப்பி செல்ல உதவியதாக ஆயிங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜமாணிக்கமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categorie: India

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார் !

Dinakaran - Mar, 01/12/2020 - 17:52

காந்திநகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அபய் பரத்வாஜ் காலமானார். இதனையடுத்து, அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categorie: India

தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து

Dinakaran - Mar, 01/12/2020 - 17:50

மதுரை: தலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். ஏதோ சிறை தண்டனை வழங்கப்பட்டது போல சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்படுகின்றன என உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

Categorie: India

இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொடைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு

Dinakaran - Mar, 01/12/2020 - 17:24

மதுரை: இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொடைக்காட்சிதொடங்குவது வரவேற்கத்தக்கது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அறநிலையத்துறை தொலைக்காட்சியில் தமிழர்களின் கட்டிட திறமைகள் மற்றும் சிறப்புகளை எடுத்து கூறமுடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடைகோரிய வழக்கில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தனித்தொலைக்காட்சி உள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Categorie: India